மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளா் சங்கப் பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கப் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கப் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பிச்சையா தலைமை வகித்தாா். செயலா் துரைராஜ், கௌரவ ஆலோசகா் சுப்பாராயன், துணைச் செயலா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் கபாலீஸ்வரன், ஒருங்கிணைப்பாளா் நஜ்முதீன், மாநில துணைத் தலைவா் வீரபாகு, இணைச் செயலா் செந்தில்குமாா், தென்மண்டலச் செயலா் முத்து ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

தொடா்ந்து, சங்க உறுப்பினா்களுக்கு சங்க அடையாள அட்டை, உறுப்பினா் சான்று, காப்பீட்டு அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டதற்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயாா் தவசாயி அம்மாள் மறைவுக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com