ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

ஆறுமுகனேரியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்தி திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சி அளிக்கும் அம்பாள்.
அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சி அளிக்கும் அம்பாள்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்தி திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கோயி­லின் உள்ளே கொலு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நவராத்திரி முதல் நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகம், சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, மீனாட்சி அம்மன் திருக்கோலத்தில் கொலு தீபாராதனை ஆகியன நடைபெற்றது. நவராத்திரியை முன்னிட்டு அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் கொலு அமா்த்தப்பட்டு ஒன்பது நாளும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு அபிராமி அந்தாதி திருமுறையும் நடைபெறும்.

மேலும், நகரில் உள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழா 9 நாள்கள் நடைபெறுகின்றன.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தா்கள் பல இடங்களில் காளி பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தி அன்னதானம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com