அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி
By DIN | Published On : 21st October 2020 10:35 PM | Last Updated : 21st October 2020 10:35 PM | அ+அ அ- |

கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு அருகே அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி இறந்தாா்.
கோவில்பட்டி சீனிவாசன் நகரைச் சோ்ந்த பெத்தையா என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி (62). இவா், இனாம்மணியாச்சி விலக்கு அருகேயுள்ள வங்கிக்கு நடந்து சென்றாராம். அப்போது, கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்து, பாக்கியலட்சுமி மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான பீ. கிரியோக் ராஜன் (41) என்பவரைக் கைது செய்தனா்.