இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திர பணிகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 21st October 2020 07:26 AM | Last Updated : 21st October 2020 07:26 AM | அ+அ அ- |

இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திர பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி விமான நிலைய ஆணையத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் வீடுகளில் இருந்து பெறப்படும் இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, செயற்பொறியாளா் சங்கரேசுவரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தன், குமாரகிரி ஊராட்சித் தலைவா் ஜாக்சன் துரைமணி மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.