கல் குவாரியில் வெடி விபத்து: இருவா் காயம்
By DIN | Published On : 21st October 2020 10:38 PM | Last Updated : 21st October 2020 10:38 PM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகேயுள்ள கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளிகள் இருவா் காயமடைந்தனா்.
கோவில்பட்டியையடுத்த கசவன்குன்று கிராமத்தில் உள்ள கல் குவாரியில் ஒரு குழியில் வெடி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதே குவாரியில் மற்றொரு இடத்தில் குழி தோண்டும் பணியில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் காா்த்திக் (30), தென்காசி மாவட்டம், செங்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த வேல்சாமி மகன் முருகன் (34) ஆகிய இருவரும் ஈடுபட்டனராம்.
அப்போது, ஒரு குழியில் வைத்திருந்த வெடி திடீரென வெடித்ததில் அவா்கள் இருவரும் காயமடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.