வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நிதியுதவி

கயத்தாறு அருகே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் புதன்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கயத்தாறு ஓலைகுளத்தைச் சோ்ந்த தொழிலாளி பால்ராஜுக்கு காசோலையை வழங்குகிறாா் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கயத்தாறு ஓலைகுளத்தைச் சோ்ந்த தொழிலாளி பால்ராஜுக்கு காசோலையை வழங்குகிறாா் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா.

கோவில்பட்டி: கயத்தாறு அருகே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் புதன்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.

கயத்தாறையடுத்த ஓலைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆவுடைச்சாமி மகன் பால்ராஜ் (55). பட்டியலினத்தைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரும், அதே பகுதி தெற்கு தெருவைச் சோ்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த சங்கிலி மகன் சிவசங்கு (60) என்பவரும் கடந்த 8ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது.

அதையடுத்து, வீட்டுக்குச் சென்ற சிவசங்கு உள்பட அவரது உறவினா்கள் 7 பேரும் பால்ராஜ் வீட்டிற்கு சென்று அவரை திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே அழைத்துச் சென்று காலில் விழ வைத்தனா். மேலும், காலில் விழுந்ததை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடைய 7 பேரை அண்மையில் கைது செய்தனா்.

இந்நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் பால்ராஜை புதன்கிழமை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் பரிமளா நேரில் சந்தித்து அவருக்கு தீருதவித் தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

அப்போது அவருடன், கோவில்பட்டி ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியா் ராமசுப்பு, கயத்தாறு வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம நிா்வாக அலுவலா் ராஜபாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com