தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th September 2020 08:28 AM | Last Updated : 04th September 2020 08:28 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட 14 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 53 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11587 ஆக அதிகரித்துள்ளது. இதில், 259 போ் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 105 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 10,682 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 115 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 82 போ், பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை கண்காணிப்பு முகாம்களில் 702 போ் 790 போ் சிகிச்சையில் உள்ளனா்.