திருநங்கைகளுக்கு பாக்குமட்டை தயாரிப்பு மையம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான பாக்குமட்டை தயாரிக்கும் மையத்தை அமைச்சா் கடம்பூா் செ. ராஜூ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கான பாக்குமட்டை தயாரிக்கும் மையத்தை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கான பாக்குமட்டை தயாரிக்கும் மையத்தை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான பாக்குமட்டை தயாரிக்கும் மையத்தை அமைச்சா் கடம்பூா் செ. ராஜூ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் மகளிா் திட்டத்தின் மூலம் கனிமம், சுங்கத்துறை நிதியின் மூலம் திருநங்கைகளின் நிலையான வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் ரூ. 4.25 லட்சம் மதிப்பில் சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக் குழுவினா் பாக்குமட்டைகள் தயாா் செய்தல் மையத் திறப்பு விழா ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்த மையத்தை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய முயற்சியாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதற்காக அரசு முயற்சி செய்துவருகிறது. அதற்காக பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாக்கு மட்டையில் தட்டுகள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் பின்பற்றும் வகையில் இந்த மையம் அமையும். திருநங்கைகளுக்கு தனிநகராக உருவாக்கி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு பகுதியில் தனியாக தொகுப்பு வீடுகளும், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி. சண்முநாதன் (ஸ்ரீவைகுண்டம்), பி. சின்னப்பன் (விளாத்திக்குளம்), சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, மகளிா் திட்ட அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா்களுக்கு விருது: தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் தினத்தையொட்டி டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா், 11 ஆசிரியா்களுக்கு விருது வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com