கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு

பாரத பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என அய்யாக்கண்ணு தெரிவித்தார். 
கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு

பாரத பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தூத்துக்குடியில் தெரிவித்தார். 

இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவில் பாதிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓபிசி பிரிவில் பாதிக்கக்கூடிய சர்மா கமிட்டி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது, 2020 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவுக்கு தனியாக கணக்கீடு பணி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பாரதப் பிரதமர் கிசான் திட்டத்தில் அதிகாரிகள்தான் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com