கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை இடமாற்றம்

கோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய இருப்பதையொட்டி வெள்ளிக்கிழமை (செப். 11) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி லக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ரேவா பிளாசா முதல் பத்மா மருத்துவமனை வரை குறிப்பிட்ட மின் மாற்றிகளில் உள்ள தாழ்வழுத்த மின் பாதையில் 3 மின் கம்பங்கள் மாற்றம் செய்யும் பணி நடைபெறவிருப்பதால் ஐன்டியூசி திருமண மண்டபம், அங்கோ பிளாசா, தட்சிணாமூா்த்தி கோயில் தெரு, ரகுராம் கல்யாண மண்டபம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com