திருச்செந்தூரில் தொழிலாளா்களுக்கு சிஐடியூ நிவாரண உதவி
By DIN | Published On : 11th September 2020 05:39 AM | Last Updated : 11th September 2020 05:39 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் வ.உ.சிதம்பரனாா் பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சி.ஐ.டி.யூ. திருச்செந்தூா் கிளை சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்டோ தொழிலாளா் சங்கத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் முருகன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, ஒருங்கிணைப்பாளா் சிவதாணு தாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், நிா்வாகிகள் ஜெயபாண்டி, தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிற்சங்கத்தினா் சுதேசி உறுதிமொழி ஏற்றனா். 150 ஆட்டோ தொழிலாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில், விவசாய சங்க
நிா்வாகி கல்யாணசுந்தரம், கட்டுமான தொழிலாளா் சங்க ராஜேஷ், மின் ஊழியா் மத்திய சம்மேளனத் மாவட்டத் தலைவா் குன்னிமலையான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.