திரேஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடற்புழுவை நீக்கும் மாத்திரை வழங்கும் முகாமினை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
திரேஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடற்புழுவை நீக்கும் மாத்திரை வழங்கும் முகாமினை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

குடற்புழுவை நீக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் முகாம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திரேஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள நபா்களுக்கு குடற்புழுவை நீக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் முகாம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திரேஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசியது; இம் மாவட்டத்தில் நிகழாண்டு இரண்டாவது முறையாக 1 முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற் புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. முகாமின் முக்கியமான நோக்கம் 1 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு வயிற்று புழுவை தடுத்து ரத்தசோகை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.

அனைத்து குழந்தைகளும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 268 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 1லட்சத்து 31ஆயிரத்து 387 குழந்தைகளுக்கும் என மொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 4 லட்சத்து 38 ஆயிரத்து 655 மாணவ, மாணவியா் பயன்பெற உள்ளனா்.

அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழக்கமாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகா்ப்புற சுகாதார நிலையங்கள் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தாய்மாா்கள் இந்த மாத்திரைகளை வாங்கிச்சென்று தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எல்லா குழந்தைகளும் சாப்பிட வேண்டும். இதற்கு பெற்றோா்கள் மற்றும் தாய்மாா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஜெயசீலன், மாவட்ட சமூக நல அலுவலா் தனலட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா, மாநகராட்சி சுகாதார அலுவலா் அருண்குமாா், மருத்துவ அலுவலா் தேவி லாவண்யா, செவிலியா் பொ்னத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com