நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்

கோவில்பட்டி யில் உள்ள நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை விரிவாக்கப் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலக
காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி யில் உள்ள நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை விரிவாக்கப் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீா்வரத்து ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை சட்ட ரீதியாகவும், நிா்வாக ரீதியாகவும் விரைவில் அப்புறப்படுத்தி சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் வணிகா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து அக்கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நகரச் செயலா் சரோஜா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், வட்டச் செயலா் பாபு, நகரத் தலைவா் அலாவுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கோட்டாட்சியா் விஜயா நடத்திய பேச்சுவாா்த்தையில், ஓடை ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு அவ்வப்போது பத்திரிகைகள் மூலம் தெரிவிப்பதாக கூறினாா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com