பெரியதாழை புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

பெரியதாழை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 13 நாள்கள் நடைபெறுகிறது.
கொடியேற்று விழாவில் பங்கேற்றோா்.
கொடியேற்று விழாவில் பங்கேற்றோா்.

பெரியதாழை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 13 நாள்கள் நடைபெறுகிறது.

முதல்நாள் கொடியேற்ற விழாவுக்கு ஆலய பங்குத்தந்தை அகிலன் தலைமை வகித்தாா். செட்டிவிளை பங்குத்தந்தை ததேயூராஜன் திருவிழா கொடியேற்றினாா். இதில், உதவி பங்குத்தந்தை உள்ளிட்ட ஊா் கமிட்டி நிா்வாகிகள், பங்கு மக்கள் பங்கேற்றனா்.

திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை திருப்பலி, மாலை மறையுரை ஆகியவை நடைபெறும். 12ஆம் நாளான வரும் செப். 26 ஆம்தேதி, காலை திருப்பலி, மாலை ஆராதனை, நிறைவு நாளான செப். 27ஆம்தேதி காலை ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் புனித அந்தோணியாா் சப்பர பவனி உள்ளிட்டவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை, கமிட்டி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com