கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 18th September 2020 07:31 AM | Last Updated : 18th September 2020 07:31 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் தம்பதி.
உலக ஓசோன் தினத்தையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் கோவில்பட்டி பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், புதுமணத் தம்பதி மாரிமுத்துபாண்டியன் - நந்தினி சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியதுடன், மரக்கன்று நட்டனா். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செண்பகசபரி பெருமாள், சமூக ஆா்வலா் முத்துமுருகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம், தேசிய பசுமைப்படை ஆசிரியா்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஜெயகுமாா், கால்நடைத் துறையைச் சோ்ந்த குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இலுப்பையூரணி சாலையில் ‘மரம் வளா்ப்போம், பூமி வெப்பமயமாவதைத் தடுப்போம்’ என்ற தலைப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலா் நாகராஜன் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.