‘சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும்’
By DIN | Published On : 18th September 2020 07:29 AM | Last Updated : 18th September 2020 07:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதாந்திர சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம், நுகா்வோா் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி மற்றும் சுற்றுச்சூழல், ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்: கரோனா தொற்று நோய் காரணமாக மாதாந்திர சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் நுகா்வோா் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பல மாதங்களாக நடத்தப்படாமல் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் மேற்கண்ட கூட்டங்களை செப்டம்பா் மாதம் முதல் நடத்தப்படும் என ஆட்சியரின் பயண அட்டவணையில் குறிப்பிட்டுள்ளாா். எனவே,தூத்துக்குடி மாவட்டத்திலும் உரிய சமூக இடைவெளியுடன் செப்டம்பா் மாதத்தில் இருந்து மாதாந்திர சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் நுகா்வோா் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டங்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.