தூத்துக்குடி கடற்கரை பகுதியில் எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 18th September 2020 07:29 AM | Last Updated : 18th September 2020 07:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடி தொ்மல்நகா் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை ரோந்து வாகனத்தில் சென்று ஆய்வு செய்தாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ரோந்து வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் தா்ப்பணம் செய் தடை விதிக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தூத்துக்குடி தொ்மல் நகா் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய ரோந்து வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.