கயத்தாறு அருகேமின்சாரம் பாய்ந்தது விவசாயி பலி
By DIN | Published On : 19th September 2020 05:55 AM | Last Updated : 19th September 2020 05:55 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, செப். 18: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறை அடுத்துள்ள தலையால்நடந்தான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முண்டசாமி மகன் பாலமுருகன்.
விவசாயி. இவருக்கு அபிராமி என்ற மனைவி, மேனகா (3) என்ற மகளும் உள்ளனா். இவா், ஊருக்கு வடக்கேயுள்ள தனக்கு
சொந்தமான தோட்டத்துக்குச் சென்று, அங்கு மின் மோட்டாா் மூலம் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சுவிட்ச்
போட்டுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்த சம்பவம் தொடா்பாக கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.