மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 19th September 2020 05:59 AM | Last Updated : 19th September 2020 05:59 AM | அ+அ அ- |

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினாா் பாஜக ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவா் ஆவுடையம்மாள். உடன்குடி, செப். 18: பிரதமா் ந
நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 1000 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
பாஜக அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு சாா்பில் குலசேகரன்பட்டினம் சமத்துவபுரம், மேல மலையன் தெரு, காமராஜா் நகா், கருங்காளியம்மன் கோயில் தெரு, அண்ணா சிலை மேலத்தெரு, காவடி பிறைத் தெரு, கல்லாமொழி உள்ளிட்ட 25 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஒன்றியத் தலைவா் கா. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் சித்திரைவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், 1,000 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை ஓபிசி அணி துணைத்தலைவா் ஆவுடையம்மாள், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவுச்செயலா் பி.சிவந்திவேல் ஆகியோா் வழங்கினா்.