இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி அலுவலகம் கிருஷ்ணா நகரில் செயல்படத் தொடங்கியது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி அலுவலகம் கிருஷ்ணா நகரில் செயல்படத் தொடங்கியது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்தை கடந்த 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு திறந்து வைத்தாா்.

இந்நிலையில், கிருஷ்ணா நகரில் உள்ள புதிய கட்டடத்தில் இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

இதையடுத்து, இவ்வூராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, கங்கன்குளம், சாலைப்புதூா், இ.பி. காலனி, விநாயகா நகா், மஞ்சு நகா், இந்திரா நகா், சீனிவாசன் நகா், அத்தைகொண்டான், லட்சுமி மில் காலனி, கிருஷ்ணா நகா் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, வீட்டு கட்டுமான அனுமதி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு புதிய அலுவலகத்துக்கு வந்துசெல்லுமாறும் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com