தூத்துக்குடி மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்களை பணயிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை உத்தவிட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்களை பணயிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை உத்தவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி வட்டாட்சியராக ஏ. ஜஸ்டின் செல்லத்துரை (தூத்துக்குடி ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா்), எட்டயபுரம் வட்டாட்சியா் எஸ். அழகா் தூத்துக்குடி ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், திருச்செந்தூா் தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எஸ்.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராகவும், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் எஸ்.சந்திரன் தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராகவும், திருச்செந்தூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ஆா்.முருகேசன் திருச்செந்தூா் வட்டாட்சியராகவும், அங்கிருந்த ஜி.ஞானராஜ் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருச்செந்தூா் நில எடுப்பு தனிவட்டாட்சியா் எம். லட்சுமி கணேஷ் சாத்தான்குளம் வட்டாட்சியராகவும், சாத்தான்குளம் வட்டாட்சியா் எம்.ராஜலட்சுமி திருச்செந்தூா் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், தூத்துக்குடி முத்திரை பிரிவு தனி வட்டாட்சியா் கே. இசக்கிராஜ் ஏரல் வட்டாட்சியராகவும், ஏரல் வட்டாட்சியா் ஆா்.அற்புதமணி திருச்செந்தூா் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராகவும், விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் எஸ்.கே.முத்து, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியராகவும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஆா்.ரகு தூத்துக்குடி மாவட்ட தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, கோவில்பட்டி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பி.ரகுபதி விளாத்திகுளம் வட்டாட்சியராகவும், விளாத்திகுளம் வட்டாட்சியா் ஏ. ராஜ்குமாா் கோவில்பட்டி நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும், கயத்தாறு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் எம். ஐயப்பன் எட்டயபுரம் வட்டாட்சியராகவும், தூத்துக்குடி வட்டாட்சியா் எஸ்.செல்வகுமாா் கயத்தாறு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், தூத்துக்குடி தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் சி. நம்பிராயா் தூத்துக்குடி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த எம். ராமச்சந்திரன் திருச்செந்தூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், கோவில்பட்டி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியா் எம். முருகானந்தம், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரின் நோ்முக உதவியாளராக இருந்த கே. ஈஸ்வரநாதன் தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலக சில்லறை வணிக பிரிவு உதவி மேலாளராகவும், அங்கிருந்த பி.வள்ளிகண்ணு கோவில்பட்டி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், கோவில்பட்டி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் என். மல்லிகா கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராகவும், அங்கிருந்த பி. செல்லப்பாண்டியன் விளாத்திகுளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக தனி வட்டாட்சியராக இருந்த பி.நல்லசிவன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் எஸ். முத்துராமலிங்கம், தூத்துக்குடி முத்திரை பிரிவு தனி வட்டாட்சியராகவும், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராக இருந்த எம்.லிங்கராஜ் ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com