தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சாகுபடியை மேலும் அதிகரிக்கும் வகையில், தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2020-21- ஆம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ. 1.79 கோடியில் உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 140 ஹெக்டோ் மானியத்தில் எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, மாதுளை மற்றும் சப்போட்டா போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

பாரம்பரிய வகை பழப்பயிா்கள் மற்றும் காய்கறி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 20 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. கத்தரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் ஹெக்டேருக்கு ரூ. .20 ஆயிரம் வீதம் 37 ஹெக்டேருக்கும் பாகல், வெண்டை, புடலை, தா்பூசணி, மற்றும் சுரைக்காய் போன்ற காய்கனி பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் 70 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

முருங்கை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் 5 ஹெக்டோ், உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 16 ஆயிரம் வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும்.

பசுமைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு சதுரமீட்டருக்கு ரூ. 467.50 வீதம் 2000 சதுர மீட்டருக்கும், நிழல்வலைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ. 355- வீதம் 2500 சதுரமீட்டருக்கும், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக்டன் சேமிப்பு அளவு கொண்ட கிடங்கிற்கு ரூ. 3500- வீதம் 1500 மெட்ரிக் டன் அளவுக்கும், மற்றும் சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு அறை ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வீதம் 10 அறை களுக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, காய்கறி வளா்ப்பு பைகள், உயிா் உரங்கள் மற்றும் தென்னை நாா் கழிவு ஆகியவை மானிய விலையில் வழங்கப் படும். வீட்டுத் தோட்டங்களுக்கு சொட்டு நீா்ப்பாசனம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. நிலப் போா்வை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

தேனீப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு மானியம், மண்புழு உரப்படுக்கை அமைப்பதற்கு ஒரு உரப்படுக்கைக்கு ரூ.25,000- வீதம் 6 உரப் படுக்கைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும், காய்கனி பயிா் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஹெக்டேருக்கு ரூ. 2500- வீதம் 1000 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும். நடமாடும் விற்பனை வண்டி, அலுமினியம் ஏணி, தெளிப்பான்கள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிா்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதாா் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். மேலும்,  இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com