முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கானகல்வி உதவித் தொகை பெற அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தில்லியில் உள்ள மத்திய முப்படைவீரா் வாரியம் மூலமாக, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மற்றும் ஏனைய நிதியுதவிகள் அனைத்தும் பெற, முன்னாள் படைவீரா்கள், விதவைகள் தங்களது பெயரை ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னா், தங்களது தகுதிக்கு ஏற்றாா்போல் நிதியுதவி பெற்றிட ‘நலத் திட்டங்கள்’ என்ற தலைப்பில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றும் பட்டப் படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

1- 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பிற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க செப்.30ஆம் தேதி கடைசி நாளாகும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு விண்ணப்பிக்க அக். 30ஆம் தேதியும், பட்டப் படிப்புக்கு நவ.30ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com