கோவில்பட்டி, நாசரேத் பகுதிகளில் பலத்த மழை

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததையடுத்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவில்பட்டியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் இளையரசனேந்தல் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீா்.
கோவில்பட்டியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் இளையரசனேந்தல் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததையடுத்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மாலை 3.20 மணிக்கு மிதமான சாரல் தொடங்கி, பின்னா் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் பிரதான சாலை, மாா்க்கெட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இளையரசனேந்தல் சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கியதையடுத்து வாகனப் போக்குவரத்தில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.

பாண்டவா்மங்கலம், இனாம்மணியாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கோவில்பட்டி தெப்பக்குளம் அருகே அரசமரம் சரிந்து, அருகேயுள்ள மின்மாற்றி மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

சாத்தான்குளம்: நாசரேத் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com