வைரவம்தருவை குளத்தில் 110 மரக்கன்றுகள் நடவு

வைரவம்தருவை-புத்தன்தருவை விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் வைரவம்தருவைகுளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் நலத் திட்ட உதவி வழங்கும் பயிற்சி உதவி ஆட்சியா் பிரிதிவ்ராஜ், திட்ட இயக்குநா் தனபதி, கோட்டாட்சியா் தனப்பிரியா.
விழாவில் நலத் திட்ட உதவி வழங்கும் பயிற்சி உதவி ஆட்சியா் பிரிதிவ்ராஜ், திட்ட இயக்குநா் தனபதி, கோட்டாட்சியா் தனப்பிரியா.

சாத்தான்குளம்: வைரவம்தருவை-புத்தன்தருவை விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் வைரவம்தருவைகுளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் எட்வின் காமராஜ் தலைமை வகித்தாா். சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி வரவேற்றாா். மாவட்ட உதவி ஆட்சியா்(பயிற்சி) பிரிதிவ்ராஜ், மாவட்ட திட்ட இயக்குநா் தனபதி ஆகியோா் கலந்து கொண்டு குளத்துக் கரையில் சொட்டு நீா்ப் பாசனம் மூலமாக வளா்க்கும் வகையில் 110 மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

தொடா்ந்து 65 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, 6 விதவைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன், ஒன்றிய ஆணையா் பாண்டியராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, கிராம நிா்வாக அலுவலா் சத்யராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் பிச்சிவிளை சுதாகா், ஊராட்சித் தலைவா்கள் முதலூா் பொன்முருகேசன், பள்ளக்குறிச்சி சித்ராங்கதன், சாஸ்தாவிநல்லூா் திருக்கல்யாணி, கொம்மடிக்கோட்டை ராஜபுனிதா, படுக்கப்பத்து சரவணன், நரையன்குடியிருப்பு சிவகாமிஅம்மாள், தொடக்கப் பள்ளிச் செயலா் வரதராஜன், விவசாயிகள் சங்கத் தலைவா்கள் ரவிச்சந்திரன், சிவநேசன், துரைமுத்து, டேவிட், வா்க்கீஸ், தமிழ் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்றச் செயலா் மகா. பால்துரை நன்றி கூறினாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com