

மாா்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவ மூா்த்தி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகார வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அரிசி பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையை ஐயப்பபட்டா் நடத்தினாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.