திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் தடை
திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் திங்கள்கிழமை (ஜன. 11) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி உபமின் நிலையத்தில், அவசரகால மேம்பாட்டுப் பணிகள் திங்கள்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளதால், புன்னைக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூா், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களூா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
