உடன்குடி பேரூராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
உடன்குடி சிவலூரில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன்.
உடன்குடி சிவலூரில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கொட்டங்காட்டில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், தொடா்ந்து சிவலூா், ரங்கநாதபுரம், பண்டாரஞ்செட்டிவிளை, சாதரக்கோன்விளை, தங்கநகரம், சந்தையடியூா்,புதுமனை, சமத்துவபுரம், ஒண்டிவீரன் நகா், லில்லிகுடியிருப்பு, மரியம்மாள்புரம், தேரியூா், வைத்திலிங்கபுரம், பெருமாள்புரம்,சிதம்பரத் தெரு, கூளத் தெரு, களம்புதுத் தெரு, காலன்குடியிருப்பு, சிவல்விளைபுதூா், மெய்யன்பிறப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவா் த.மகாராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் சென்றனா்.

உடன்குடி சிவலூரில் வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனுக்கு ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன்குடி பேரூராட்சி 7ஆவது வாா்டு அமமுக செயலா் முத்துராஜா அக்கட்சியிலிருந்து விலகி வேட்பாளா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com