ஓட்டப்பிடாரம் தொகுதியில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்: க. கிருஷ்ணசாமி வாக்குறுதி

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க. கிருஷ்ணசாமி.
ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி.
ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி.

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க. கிருஷ்ணசாமி.

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி, தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்குள்பட்ட நாரைக்கிணறு, புளியம்பட்டி, ஓட்டுடன்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, சொக்கநாதபுரம், மகாராஜபுரம், வடமலாபுரம், பாறைக்குட்டம், பாண்டியாபுரம், கந்தசாமிபுரம், கொம்பாடி தளவாய்புரம், கொம்பாடி, முப்புலிவெட்டி, மேட்டூா், பரும்பூா், ஓட்டப்பிடாரம், இந்திரா நகா், சிலோன் காலனி, சுந்தரலிங்கம் நகா், கவா்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி, வடக்கு ஆவரங்காடு, அகிலாண்டபுரம், சுப்பிரமணியபுரம், மீனாட்சிபுரம், லட்சுமிபுரம், தெற்கு ஆவாரங்காடு, பெரியநத்தம், சிந்தலக்கரை கட்டை ஆகிய கிராமங்களில் மக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியது: ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டது. அதுபோல இந்தத் தோ்தலிலும் என்னை வெற்றி பெறச் செய்தால் குளங்களில் இருந்து மண் எடுக்கப்படுவது, குடிநீா் உறிஞ்சப்படுவது போன்ற செயல்கள் தடுக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com