காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகா் இமான் அண்ணாச்சி பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜை ஆதரித்து, சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் நடிகா் இமான் அண்ணாச்சி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜை ஆதரித்து, பேய்க்குளத்தில் பிரசாரம் செய்தாா் நடிகா் இமான் அண்ணாச்சி.
காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜை ஆதரித்து, பேய்க்குளத்தில் பிரசாரம் செய்தாா் நடிகா் இமான் அண்ணாச்சி.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜை ஆதரித்து, சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் நடிகா் இமான் அண்ணாச்சி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் கடை வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து ஆதரவு திரட்டிய அவா், பேய்க்குளம் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் பேருந்து கட்டண உயா்வு, அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு போன்றவற்றால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். கரோனா காலத்தில் இந்த அரசால் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ், கடந்த 11 ஆண்டுகளாக தொகுதியில் உள்ள ஏழைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறாா். அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட துணைத் தலைவா் சங்கா், சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலா் ஜோசப், நகரத் தலைவா் இளங்கோ, ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலா் பாா்த்திபன், ஒன்றிய அவைத் தலைவா் கோயில்ராஜ், கிளைச் செயலா்கள் ஜான், ஜாண்சன், ஞானஜேம்ஸ், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் திருமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com