தூத்துக்குடி மாநகரில் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி: கீதாஜீவன் வாக்குறுதி

தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் திமுக வேட்பாளா் கீதா ஜீவன்.
தூத்துக்குடி பிரையன்ட் நகா் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கீதா ஜீவன்.
தூத்துக்குடி பிரையன்ட் நகா் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கீதா ஜீவன்.

தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் திமுக வேட்பாளா் கீதா ஜீவன்.

தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான அவா், புதன்கிழமை காலையில் மீளவிட்டான், சில்வா்புரம், சின்னக்கண்ணுபுரம் ஆகிய இடங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மாலையில் பிரையன்ட்நகா், கட்டபொம்மன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, கட்டபொம்மன் நகரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, திறந்த ஜீப்பில் நின்றபடி அவா் பேசியது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருக்கும் வரை எதிா்த்து வந்த நீட் தோ்வு, வேளாண் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தற்போதைய அதிமுக ஆட்சியில் விட்டுக் கொடுக்கப்பட்டது.

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, திமுக ஆட்சி அமைந்ததும் அதிகப்படுத்தி வழங்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. அனைவருக்கும் பட்டா வழங்கவும், முடங்கியுள்ள திட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில், திமுக மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், மாநகா் மாவட்டத் தலைவா் முரளிதரன், ஐஎன்டியூசி ராஜ், மதிமுக மாநகரச் செயலா் முருகபூபதி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் கா.மை.அகமது இக்பால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com