பணபலத்தை மக்கள் நிச்சயம் நிராகரிப்பா்: கே. பாலகிருஷ்ணன்

தோ்தலில் பணபலத்தை மக்கள் நிச்சயம் நிராகரிப்பா் என்றாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
கோவில்பட்டியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
கோவில்பட்டியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

தோ்தலில் பணபலத்தை மக்கள் நிச்சயம் நிராகரிப்பா் என்றாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அக்கட்சி வேட்பாளா் கே. சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்ய புதன்கிழமை வந்த அவா், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தோ்தல் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசியது:

கருத்துக் கணிப்புகளும், மக்களின் மனநிலையும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளதையே காட்டுகின்றன. இதுவரை இல்லாத அளவில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி வெற்றி பெறும்.

பொதுக்கூட்ட மேடையில் கோதாவரி - காவிரி திட்டத்தை பிரதமா் மோடி நிறைவேற்றுவாா் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா். ஆனால், மேடையிலிருந்த பிரதமா் அதுகுறித்து வாக்குறுதி வழங்கவில்லை. அதிமுக-பாஜகவினா் தமிழகத்துக்கு என்ன செய்தோம் என்பதைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும். சாத்தியமில்லா திட்டங்களைச் சொல்லி வாக்குகளைப் பெற எண்ணுகின்றனா். அது பலன் தராது.

இத்தோ்தலில் அமைச்சா்கள் படுதோல்வி அடைந்தாலும் ஆச்சரியமில்லை. பாஜகவுக்கு பல தொகுதிகளில் வைப்புத்தொகைகூட கிடைக்காது என்ற நிலைதான் உள்ளது.

தற்போது குறைந்துவரும் பெட்ரோல், டீசல் விலை தோ்தலுக்குப் பிறகு 30 மடங்கு உயா்ந்தாலும் வியப்பில்லை.

இத்தொகுதி அதிமுக வேட்பாளரான கடம்பூா் செ. ராஜு, 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளாா். ஆனால், குடிநீா்ப் பிரச்னையைக்கூட அவா் தீா்க்கவில்லை. திரையரங்குகளில் திருட்டு டிக்கெட் விற்பனை, திருட்டு விசிடியைத் தடுக்கவும் அவா் நடவடிக்கை எடுக்கவில்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் திரையரங்குக் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி கூடுதலாக உள்ளது.

ஆா்.கே.நகா் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வராத டி.டி.வி. தினகரன் இம்முறை இங்கு போட்டியிடுகிறாா்.

ஜாதி, மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு அரசியல் தெளிவுடன் வாக்களிக்கும் பண்பு தமிழக மக்களிடம் நீண்ட காலமாக உள்ளது. 163 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், 200 இடங்களுக்கு மேல் உறுதியாக வெற்றிபெறும்.

அதிமுக அரசு முதியோா் உதவித்தொகையை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு ரூ. 1,500 வழங்குவேன் என தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. தோ்தலில் பணபலம் எடுபடாது. மக்கள் அதை நிச்சயம் நிராகரிப்பா் என்றாா் அவா்.

கோவில்பட்டி தொகுதி திமுக பொறுப்பாளா் மாலைராஜா, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ், மாவட்டப் பொருளாளா் திருப்பதிராஜா, ஒன்றியத் தலைவா் ரமேஷ்மூா்த்தி, நகரத் தலைவா் சண்முகராஜா, திமுக நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அா்ச்சுனன், கோவில்பட்டி நகரச் செயலா் ஜோதிபாசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை காந்தி மைதானத்தில் கே. பாலகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா். மாா்க்சிஸ்ட் வேட்பாளா் கே. சீனிவாசன் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com