முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 01:41 AM | Last Updated : 04th April 2021 01:41 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கோவில்பட்டியையடுத்த சாலைப்புதூா், இலுப்பையூரணி சலவையா் காலனி, விஸ்வநாத நகா், சமத்துவபுரம், லிங்கம்பட்டி, சென்னையம்பட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, அரசன்குளம், நாலாட்டின்புதூா், மந்தித்தோப்பு சாலை கணேஷ் நகா் மற்றும் கோவில்பட்டியில், யாதவ மகாசபை தேசியத் தலைவா் தேவநாதன், வேட்பாளா் கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுப்புராஜ், ஒன்றியச் செயலா் வினோபாஜி, அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன், தமாகா வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி, நகரத் தலைவா் ராஜகோபால், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ராமச்சந்திரன், மாவட்டத் தலைவா் மாடசாமி, மாவட்டச் செயலா் வேலுச்சாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலா் ராசுபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.