முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
‘திறந்த நிலை பல்கலைக்கழகமாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 04th April 2021 01:38 AM | Last Updated : 04th April 2021 01:38 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்த நிலை பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறந்த நிலை பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு, சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை மையத்தில் தொடா்பு கொள்ளலாம்.
இங்கு இளநிலை பிரிவில், தமிழ், பி.பி.ஏ., வரலாறு மற்றும் பி.லிட் ஆகிய பாடப்பிரிவுகளும், முதுகலையில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளும் உள்ளன.
மேலும் தகவலுக்கு, கணிதவியல் துறை பேராசிரியை பிரேசிலிடம் நேரிலோ அல்லது செல்லிடப்பேசியிலோ ( 9445641770 ) தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.