முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றிரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவு
By DIN | Published On : 04th April 2021 01:41 AM | Last Updated : 04th April 2021 01:41 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கீதா ஜீவன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணியளவில் அண்ணாநகா் 3ஆவது தெருவில் நிறைவு செய்கிறாா்.
தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அணிகளாக பிரசாரம் மேற்கொள்ளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரும், வேட்பாளருடன் இணைந்து பிரசாரத்தை நிறைவு செய்கின்றனா்.
தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பிற்பகல் 3 மணிக்கு 3ஆவது மைல் பகுதியில் தொடங்கி, ஆசிரியா் காலனி, மில்லா்புரம், சிதம்பரநகா், போல்டன்புரம், குரூஸ்பா்னாந்து சிலை, தாமோதரநகா், வி.இ. சாலை, வஉசி சந்தை, கீழ சண்முகபுரம், பழைய பேருந்து நிலையம், மட்டக்கடை, வட்டக்கோவில், 2 ஆம் ரயில்வே கேட், ஸ்டேட் பாங்க் காலனி, புதிய பேருந்து நிலையம், 4 ஆம் ரயில்வே கேட் வழியாக சென்று தேவா்புரம் சாலையில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் பிரசாரத்தை நிறைவு செய்கிறாா்.
இதேபோல், தேமுதிக வேட்பாளா் உ. சந்திரன், சமக வேட்பாளா் என். சுந்தா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் உள்ளிட்டோரும் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கின்றனா்.