முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 04th April 2021 01:52 AM | Last Updated : 04th April 2021 01:52 AM | அ+அ அ- |

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சனிக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் காற்று பலமாக வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.