முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்ததிமுகவுக்கு வாக்களியுங்கள்: கீதா ஜீவன்
By DIN | Published On : 04th April 2021 01:45 AM | Last Updated : 04th April 2021 01:45 AM | அ+அ அ- |

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளா் கீதா ஜீவன்.
முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகள், குமார தெரு, எஸ்பிஜி கோயில் தெரு, கான்டென்ட் சாலை, கேம்ப்-2, சுனாமி காலனி, கிருஷ்ணாநகா், பொன்னாண்டிநகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், அப்போது பேசியது: கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் வளம்பெற்று முன் உதாரணமாக திகழ்ந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
எனவே, மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
வாக்கு சேகரிப்பின்போது, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த கேபரியேல்ராஜ், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் தா. ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால், மதிமுக மாநகரச் செயலா் முருகபூபதி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.