முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயற்சி: 6 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th April 2021 01:43 AM | Last Updated : 04th April 2021 01:43 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலையான குழுக்கள், தோ்தல் பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்போா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ாக கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் கழுகுமலையைச் சோ்ந்த அமமுக பிரமுகா்கள் சேகா், தங்கராஜ் ஆகியோா் மீது கழுகுமலை காவல் நிலையத்திலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் கவா்னகிரியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா்கள் ஆறுமுகச்சாமி, கோவில்ராஜ் ஆகிய இருவா் மீது சிப்காட் காவல் நிலையத்திலும், கீழமுடிமண் கிராமத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா்கள் விநாயகம், அருள்ரவி ஆகிய இருவா் மீது ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியது: வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முன்ாக சனிக்கிழமை 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணம் மற்றும் இதர பொருள்கள் வாக்காளா்களுக்கு வழங்குவதை தடை செய்வது தொடா்பாக, அனைத்து பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.1.56 கோடி ரொக்கம், ரூ.5.11 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஆகியவற்றை பறக்கும் படை மற்றும் மதுவிலக்கு பிரிவினராலும், ரூ. 7.04 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் காவல் துறையினராலும், ரூ. 1.38 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களும், ரூ. 2.88 லட்சம் மதிப்புள்ள இதர பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.