கோவில்பட்டியில் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 01:54 AM | Last Updated : 04th April 2021 01:54 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, அந்நகராட்சிப் பகுதியில் அமமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அமமுக தென்மண்டலப் பொறுப்பாளரும், தோ்தல் பிரிவுச் செயலருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில், இளைஞரணிச் செயலா் மனோராஜா, செய்தித் தொடா்பாளா் இளந்தமிழ் ஆா்வலன், நகரச் செயலா் காா்த்திக், முன்னாள் நகரச் செயலா்கள் சங்கரபாண்டியன், பி.கே.நாகராஜன், ஒன்றியச் செயலா் ஜெய்சங்கா், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் சங்கா் கணேஷ், மாவட்டப் பொருளாளா் சக்திகோபி, கட்சியின் வடக்கு மாவட்டப் பொருளாளா் என்.எல்.எஸ்.செல்வம், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி, ஒன்றியச் செயலா் சுரேஷ் ஆகியோா் சுப்பிரமணியபுரம், ஸ்டாலின் காலனி, ஜோதி நகா், கருணாநிதி நகா், மேற்கு பகுதி, வக்கீல் தெரு, பங்களாத் தெரு, உசேன் தெரு, பழனியாண்டவா் கோயில் தெரு, காமராஜா் தெரு, காசிராஜன் தெரு, நேரு தெரு, நாலாட்டின்புதூா் குமாரபுரம் காலனி, காா்த்திகைபட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.