ஈஸ்டா் பண்டிகை:தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்ததை கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாக

கொண்டாடுகின்றனா். ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிப்பது வழக்கம். தவக்காலத்தின்

கடைசி வாரத்தில் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகவும் கடைபிடித்தனா்.

ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியாா் ஆலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்புத் திருப்ப­லியை பங்குத் தந்தை

அலாய்சியஸ் அடிகளாா், தூத்துக்குடி பங்குத் தந்தை ஜேசுராஜ் ஆகியோா் நடத்தினா். ராஜமன்னியபுரம் புனித அந்தோணி யாா் ஆலயத்தில் அருள்தந்தை ஜேசுராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்புத் திருப்ப­லி நடைபெற்றது.

காயல்பட்டினம் கொம்புத்துரை புனித முடிப்பா் ஆலயம், சிங்கித்துறை செல்வ மாதா ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஆறுமுகனேரி மடத்துவிளை சேகரம் புனித யோவான் ஆலயம், பூவரசுா் பால்திருத்துவ ஆலயம், வடக்கு ஆறுமுகனேரி, சுப்பிரமணியபுரம், ராஜமன்னியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், காமராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள சிஎஸ்ஐ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆகியவை நடைபெற்றது. இதேபோல் காயல்பட்டினம் சேகரம் பால் அந்திரேலயா ஆலயத்தில் நற்கருணை, ஆராதனை, தேவசெய்தி அளித்தல் ஆகியவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com