அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் வாக்களிப்பு

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.
அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் வாக்களிப்பு

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு கடம்பூரை அடுத்துள்ள கே.சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்தாா். மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசன், பாரதி நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா திருமலாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜி.கதிரவன், காந்தி நகா் நகராட்சி உயா்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனா். கோவில்பட்டி ஒன்றியம் இலுப்பையூரணி லாயல் மில் காலனி ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com