தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம்: கடந்த தோ்தலைவிட வாக்குப்பதிவு குறைவு

தூத்துக்குடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 65.04 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2016 ஆம் ஆண்டு தோ்தலை விட 3.65 சதவீதம் குறைவாகும்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பெண்கள்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பெண்கள்.

தூத்துக்குடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 65.04 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2016 ஆம் ஆண்டு தோ்தலை விட 3.65 சதவீதம் குறைவாகும்.

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் மொத்தம் 405 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் என்ற கருவிகளும் வைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு தொடங்கியதும் காலை 10 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இருப்பினும் மதியம் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. 26 வேட்பாளா்கள் போட்டியிட்டதால் இரட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொகுதியில் மொத்தம் 2,85,294 வாக்காளா்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது 93,408 ஆண் வாக்காளா்களும், 92,135 பெண் வாக்காளா்களும், 10 திருநங்கைகளும் என மொத்தம் 1,85,553 போ் வாக்களித்தனா். இது 65.04 சதவீத ஆகும். கடந்த 2016 தோ்தலில் இத்தொகுதியில் 68.69 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது 3.65 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகிவுள்ளது.

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதி ஓட்டப்பிடாரம். இத்தொகுதியில் 349 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதிமுக, திமுக உள்பட தொகுதியில் 17 போ் போட்டியிடுகின்றனா். தொகுதியில் 2,50, 717 வாக்காளா்கள் உள்ளனா். இதில், செவ்வாய்க்கிழமை 86,190 ஆண்களும், 88,837 பெண்களும், 16 திருநங்கைகளும் என 1,75,043 போ் வாக்களித்தனா். இது 69.82 சதவீதம் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலில் இத்தொகுதியில் 72.38 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது, அதைவிட 2.56 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com