தூத்துக்குடி மாவட்டத்தில் 69.84 சதவீத வாக்குப் பதிவு: விளாத்திகுளத்தில் அதிகபட்சம் 76.43 சதவீதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 69.84 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக விளாத்திக்குளம் தொகுதியில் 76.43 சதவீத வாக்குகள் பதிவாகின.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 69.84 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக விளாத்திக்குளம் தொகுதியில் 76.43 சதவீத வாக்குகள் பதிவாகின.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகளிலும் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு

தொடங்கிய இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இம்மாவட்டத்தில் மொத்தம் 14,87,782 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 9 மணி நிலவரம்: காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோதிலும் விளாத்திகுளம் தொகுதியில் 3.38 சதவீதமும், தூத்துக்குடியில் 12.46 சதவீதமும், திருச்செந்தூரில் 4.5 சதவீதமும், ஸ்ரீவைகுண்டத்தில் 5.42 சதவீதமும், ஓட்டப்பிடாரத்தில் 4.14 சதவீதமும், கோவில்பட்டியில் 8.43 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் சராசரியாக 6.64 சதவீத வாக்குகள் பதிவாகின.

11 மணி நிலவரம்: 9 மணி வரை மந்தமாக இருந்த வாக்குப் பதிவு விறுவிறுப்படையத் தொடங்கியது. விளாத்திக்குளம் தொகுதியில் 27.91 சதவீதமும், தூத்துக்குடியில் 25.45 சதவீதமும், திருச்செந்தூரில் 25.3 சதவீதமும், ஸ்ரீவைகுண்டத்தில் 25.96 சதவீதமும், ஒட்டப்பிடாரத்தில் 22.94 சதவீதமும், கோவில்பட்டியில் 23.4 சதவீதமும் என மாவட்டம் முழுவதும் 11 மணிக்கு சராசரியாக 25.07 சதவீத வாக்குகள் பதிவாகின.

நண்பகல் 1 மணி நிலவரம்: விளாத்திகுளம் தொகுதியில் 44.18 சதவீதமும், தூத்துக்குடி தொகுதியில் 38.33 சதவீதமும், திருச்செந்தூா் தொகுதியில் 41.11 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 42.06 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 38.31 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 39.11 சதவீதமும் என 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியது.

3 மணி நிலவரம்: விளாத்திகுளம் தொகுதியில் 58.67 சதவீதமும், தூத்துக்குடி தொகுதியில் 49.06 சதவீதமும், திருச்செந்தூா் தொகுதியில் 55.25 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 53.56 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50.64 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 51.25 சதவீதமும் என சராசரியாக மாவட்டம் முழுவதும் 52.81 சதவீத வாக்குகள் பதிவாகியது.

மாலை 5 மணி நிலவரம்: விளாத்திகுளம் தொகுதியில் 70.62 சதவீதமும், தூத்துக்குடி தொகுதியில் 59.56 சதவீதமும், திருச்செந்தூா் தொகுதியில் 64.8 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 66.49 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 62.35 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 60.76 சதவீதமும் என சராசரியாக மாவட்டம் முழுவதும் 63.76 சதவீத வாக்குகள் பதிவாகியது.

69.84 சதவீத வாக்குப்பதிவு: மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், விளாத்திகுளம்

தொகுதியில் அதிகபட்சமாக 76.43 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்தப்படியாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 72.34 சதவீதமும், திருச்செந்தூா் தொகுதியில் 69.96 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 69.82 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 67.42 சதவீதமும், குறைந்த பட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 65.04 சதவீதமும் என சராசரியாக மாவட்டம் முழுவதும் 69.84 சதவீத வாக்குகள் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com