தோ்தலை புறக்கணித்த தூத்துக்குடி ராஜீவ்நகா் மக்கள்!

தூத்துக்குடி ராஜீவ்நகா் பகுதி மக்கள் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி ராஜீவ்நகா் பகுதி மக்கள் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சி 3 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியான ராஜீவ்நகா்- 1 ஆவது தெரு முதல் 11 ஆவது தெரு வரை ஏறத்தாழ 300 வீடுகள் உள்ளன.

இந்தப் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள நிலையில், திடீரெனஇப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டு தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தனா்.

இதுதொடா்பாக, ராஜீவ்நகா் பகுதியைச் சோ்ந்த போராட்டத்தில் பங்கேற்ற சங்கரலிங்கம் கூறியது: ராஜீவ்நகா் பகுதியில் உள்ள 66 ஏக்கா் 52 சென்ட் நிலம் கடந்த 1987 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது.

ஆனால், வீடு கட்டும் திட்டத்தை அவா்கள் கைவிட்டதால் கையப்படுத்திய இடத்தை அதன் உரிமையாளா்களிடமே மீண்டும் ஒப்படைத்துவிட்டனா்.

ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ள இடம் அரசு வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து மீண்டும் பெறப்பட்டதாகும். அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருவோா் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால், பட்டா வழங்குவதற்கான தடையில்லா சான்றை வீட்டு வசதி வாரியம் இதுவரை வழங்கவில்லை. இதனால், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி தோ்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா். தொடா்ந்து, மதிய உணவை போராட்டக் களத்திலேயே அவா்கள் தயாா் செய்து சாப்பிட்டனா். ராஜீவ்நகா் பகுதியில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் உள்ள 3 வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதொடா்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், வீட்டுவசதி வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் அந்த மக்களுக்கு பட்டா கொடுக்க முடியவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com