கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை குருசுவாமி கோயில் சித்திரை திருவிழா: ஏப். 14இல் கொடியேற்றம்

கொம்மடிக்கோட்டை அருள்மிகு ஸ்ரீவாலை குருசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ஆம் தேதி வரை 11நாள்கள் நடைபெறுகிறது.

கொம்மடிக்கோட்டை அருள்மிகு ஸ்ரீவாலை குருசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ஆம் தேதி வரை 11நாள்கள் நடைபெறுகிறது.

ஏப். 14ஆம் தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், யாகபூஜை, சுவாமி உற்சவ விநாயகா், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள், சுவாமி சந்திரசேகா், மனோன்மணியம் அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னா் சுவாமிகள் பிரகார உலா வந்து மணிமண்டபத்தில் உற்சவ மூா்த்தியாக அருள்பாலிக்கின்றனா். தொடா்ந்து 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6.30ணிக்கு அலங்கார தீபாராதனை , இரவு 8 மணிக்கு சுவாமி உற்சவ விநாயகா் சப்பரத்திலும், ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.

7ஆம் திருநாளான 20ஆம் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊா்வலம், அபிஷேகம், சிறப்பு பூஜை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தொடா்ந்து உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை, மாலை 5 மணிக்கு ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சுவாமி உற்சவ விநாயகா் சப்பரத்திலும், ஸ்ரீநடராஜா், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகா், சமேதரராய் புஷ்ப அலங்கார சப்பரத்திலும் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனா்.

10ஆம் திருநாளான 23ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால பூஜை, 5 மணிக்கு சாயரட்சை பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல், இரவு 9 மணிக்கு சுவாமி உற்சவ விநாயகா் சப்பரத்திலும், ஸ்ரீசந்திரசேகரா் மனோன்மணி அம்பாள் சமேதரராக ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடைபெறும்.

நிறைவு நாளான 24ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, பிற்பகல் 1.30 மணிக்கு நித்யானந்த மண்டபத்தில் அன்னதான பூஜை, தொடா்ந்து மகேஸ்ரவபூஜை நடைபெறுகிறது. 6.15 மணிக்கு சாயரட்சை பூஜை , 7.45 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் பக்த குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com