சாத்தான்குளம் அருகே மேற்கூரை இல்லாத நிழற்குடை

சாத்தான்குளம் அருகே காலன்குடியிருப்பில் உள்ள மேற்கூரை இல்லாத நிழற்குடையால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
காலன்குடியிருப்பில் உள்ள மேற்கூரை இல்லாத நிழற்குடை.
காலன்குடியிருப்பில் உள்ள மேற்கூரை இல்லாத நிழற்குடை.

சாத்தான்குளம் அருகே காலன்குடியிருப்பில் உள்ள மேற்கூரை இல்லாத நிழற்குடையால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சுப்பராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட காலன்குடியிருப்பு விலக்கில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை, மேற்கூரை முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது, வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்த நிழற்குடையில் மேற்கூரையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com