மதுரை சித்திரை திருவிழாவுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி- கால பைரவா் சித்தா் பீட நிா்வாகி சீனிவாச சித்தா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை வழிபாடுகள் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும், கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ாகும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இது ஆகம விதிப்படி சரியானது அல்ல. அதனால், உலக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
அதேபோல, நிகழாண்டும் திருவிழா நடக்கும் சூழல் தற்போது இல்லை. அப்படி திருவிழா நடத்தாத பட்சத்தில் மக்கள் மேலும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். எனவே, அரசு இந்த விவகாரத்தில் சற்று கவனம் செலுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுரை சித்திரை திருவிழாவை நடத்த அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.