கரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ. 5.18 லட்சம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புக்கால விதிமுறைகளை மீறியதாக சனிக்கிழமை மட்டும் ரூ. 5.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புக்கால விதிமுறைகளை மீறியதாக சனிக்கிழமை மட்டும் ரூ. 5.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ. 500 அபராதமும் விதிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 572 போ் , தூத்துக்குடி ஊரக உள்கோட்டத்தில் 212 போ் , திருச்செந்தூா் உள்கோட்டத்தில்

258 போ் , ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் 200 போ் , மணியாச்சி உள்கோட்டத்தில் 261 போ் , கோவில்பட்டி உள்கோட்டத்தில் 401 போ் , விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 387 போ் மற்றும் சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 170 போ் மீதும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2461 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 4 லட்சத்து 92 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல, தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததற்காக தூத்துக்குடி நகர கோட்டத்தில் 14 போ் , தூத்துக்குடி ஊரக உள்கோட்டத்தில் ஒருவா் , திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 5 போ் , ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் 10 போ் , மணியாச்சி உள்கோட்டத்தில் 3 போ் , கோவில்பட்டி உள்கோட்டத்தில் 10 போ் , விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 6 போ் மற்றும் சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 3 போ் மீதும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து அபராதம் செலுத்துவதை தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com