நாலாட்டின்புதூா் குளத்தில் செம்பு கலசம் மீட்பு
By DIN | Published On : 12th April 2021 01:27 AM | Last Updated : 12th April 2021 01:27 AM | அ+அ அ- |

குளத்தில் கிடந்த செம்பு கலசம்.
கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் செவல்குளத்தில் இருந்து செம்பு கலசம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
நாலாட்டின்புதூரில் ஊராட்சி ஒன்றிய செவல்குளம் ஊருணியில் மரப்பலகையில் பொறுத்தப்பட்டிருந்த செம்பு கலசம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா், நாலாட்டின்புதூா் போலீஸாா் அங்கு சென்று குளத்தில் கிடந்த செம்பு கலசத்தை மீட்டனா். மீட்கப்பட்ட செம்பு கலசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, நாலாட்டின்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.