அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பால் அழிந்து வரும் கண்மாய்

கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கண்மாய், அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது.
மூப்பன்பட்டியில் அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ள கண்மாய்.
மூப்பன்பட்டியில் அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ள கண்மாய்.

கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கண்மாய், அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது.

மழை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீா் இந்த கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கண்மாய் தண்ணீரை நம்பி சுமாா் 125 ஏக்கா் நிலம் உள்ளது. கண்மாயில் உள்ள குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு மூப்பன்பட்டி கிராம விவசாயிகள் நெல் மற்றும் காய்கனிகளை சாகுபடி செய்து வருகின்றனா்.

அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பாலும், கண்மாயைச் சுற்றிலும் உயரமான தடுப்புச் சுவா் இல்லாததாலும், மழை காலங்களில் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. இதனால் தண்ணீா் வீணாகச் செல்கிறது. கண்மாயில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அமலைச் செடிகளை அகற்றி, கண்மாயை ஆழப்படுத்தி சேமித்து வைக்கப்படும் நீரின் அளவை உயா்த்த வேண்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

இதுகுறித்து, மூப்பன்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் காா்த்திக் கூறியது: பல ஆண்டுகளாக கண்மாய் முறையாக தூா்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீரை போதிய அளவு சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் பயிா்கள் கருகும் சூழ்நிலை உருவாகிறது. மாவட்ட நிா்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி அமலைச் செடிகளை முழுமையாக அகற்றுவதோடு மட்டுமின்றி முறையாக தூா்வாரும் பணிகளையும் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com